தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது, வருகிற 2026-ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் சக்தியின் உதவியுடன் மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

அதை தடுப்பதற்கு சில பேர் பகல் கனவு காண்பார்கள் இல்லையா? அவர்கள் எல்லாருக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். காற்று, மழை இயற்கையை யாரால் தடுக்க முடியும்? இவையெல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டவை. அப்படி தான் எம்மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது. அரசியல் சூறாவளியையும், தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர்? எம் மக்களுக்கான அரசியலையும் வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது