
கர்நாடக மாநிலத்தில் பரசுராம் என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் வாழ்ந்து வருகிறார். இவர் சிறு வயதிலேயே இரண்டு கால்களையும் இழந்தவர். இவர் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தானே உழைத்து முன்னேற வேண்டும் என முடிவு செய்துள்ளார். 9-ம் வகுப்பு வரை படித்த பரசுராம் வசதி இல்லாததால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை. இந்நிலையில் பரசுராமுக்கு அரசு சார்பில் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரசுராம் பகலில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராகவும் இரவு நேரத்தில் வாட்ச்மேன் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.
இது பற்றி பரசுராம் கூறியதாவது, எனக்கு பலரும் ஆதரவு கொடுக்கிறார்கள். என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. என்னுடைய வாடிக்கையாளர்களும் எனக்கு உறுதுணையாக இருப்பதோடு அவர்கள் கொடுக்கும் டிப்ஸும் எனக்கு வாழ்க்கையை நடத்தி செல்ல உதவுகிறது என்று கூறியுள்ளார். மேலும் இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளியான பரசுராம் உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்காக பகலில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராகவும் இரவு நேரத்தில் வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வருவது பலரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.