
ஒருவருக்கு அரசின் குறிப்பிட்ட சேவை கிடைக்காவிட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியிடம் மனு அளித்து, பிரச்னையை சரி செய்துகொள்ளலாம். அவரும் கொடுத்த புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவருக்கும் மேல் உள்ள அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். அங்கும் முறையான நடவடிக்கை இல்லையெனில் தலைமைச் செயலகத்தில் மக்களிடம் மனுக்கள் பெற முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது.
இங்கு நேரில் வந்து மக்கள் தங்களின் கோரிக்கை, புகார் மனு அளிக்கலாம். நேரில் வர முடியவில்லையெனில், அதற்கும் தனி வசதி உள்ளது. 1100 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது [email protected]. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ புகாரை முன்வைக்கலாம். இதற்கு உடனுக்குடன் பதில் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.