நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சி கூத்தங்குடி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். மேலும் மாநில விவசாயிகள், ஆலோசனை குழு உறுப்பினர் மகா குமார், விவசாயிகள் சங்கத் தலைவர் வேணு காளிதாசன், ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயலட்சுமி ராஜேந்திரன், விவசாய சங்க செயலாளர் பிரபு உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா… எங்கு தெரியுமா…? விவசாயிகள் மகிழ்ச்சி…!!!!
Related Posts
இனி உள்ளூர் மக்களுக்கும் “இ பாஸ்” அவசியம்”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!
தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் முறையை…
Read moreகணவரின் நண்பரோடு கள்ளக்காதல்…. குழந்தைகளோடு வீட்டிற்கே சென்ற மனைவி…. கணவனின் வெறிச்செயல்…!!!
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட்டையில் வசித்து வந்தவர் 27 வயது இளைஞர் கௌதம். பல வழக்குகளில் குற்றவாளியான இவரை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. இதுகுறித்த தகவரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின்…
Read more