
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ் கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இருந்து விலகியுள்ளார். கட கடந்த 2016ல் பாஜகவில் இணைந்த அவர், 2020 வரை மே.வங்க பாஜக துணைத்தலைவராக பதவி வகித்தார். ராஜினாமா கடிதத்தில், ‘சுபாஷ் சந்திர போஸின் சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்வதற்கு பாஜகவிடம் இருந்து தனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பாஜகவில் முழு மனதுடன் என்னால் தொடர முடியாது’ என கூறி விலகியுள்ளார்.