
பலத்த காயம் அடைந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டுள்ளது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில், மருத்துவமனையில் மம்தா பானர்ஜி அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. காயமடைந்த மம்தா பானர்ஜிக்கு எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு மற்றும் முகத்தில் இரத்தத்துடன், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் பானர்ஜியின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. முதலமைச்சருக்கு வீட்டில் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவமனை அதிகாரி ஒருவர், 69 வயதான அரசியல்வாதி, தெற்கு கொல்கத்தாவின் பாலிகங்கேயில் ஒரு நிகழ்வில் இருந்து திரும்பிய சிறிது நேரத்திலேயே, தனது வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டதாக தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி “எங்கள் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரும் காயம் ஏற்பட்டது. தயவுசெய்து அவருக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி மீண்டு வரவேண்டும் என்று திரிணாமூல் தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
“முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். விரைவில் உடல் நலம் பெற எங்கள் பிரார்த்தனைகள் அவருடன் உள்ளன” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் X இல் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர், இந்தப் படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். மேற்கு வங்க முதல்வர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்தார். மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.
இந்நிலையில் பலத்த காயம் அடைந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், மேற்கு வங்க முதல்வர் மாண்புமிகு சாலை விபத்து குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் உள்ளன, அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Shocked and deeply concerned about the road accident involving Hon'ble Chief Minister of West Bengal @MamataOfficial didi.
My thoughts are with her during this difficult time, and I'm wishing her a speedy recovery. #MamataBanerjee https://t.co/OKx0eOfgcH
— M.K.Stalin (@mkstalin) March 14, 2024