
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் IPL தொடருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள். குறிப்பாக IPL-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கும். அதற்கு காரணம் தோனி தான். இந்த வருடம் மார்ச் மாதம் 21ஆம் தேதி IPL தொடர் தொடங்குகிறது.
இதுதான் தோனி கடைசியாக விளையாடும் IPL தொடராக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் இந்த தொடர் மீதான தோனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. IPL தொடரில் ஒவ்வொரு வருடமும் ஜெர்சி மாற்றப்படும். ஸ்பான்ஸர்களுக்கு ஏற்றவாறு புது ஜெர்சி மாறும்.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருக்கான புதிய ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கடந்த வருடம் யூரோக்ரிப் டயர்ஸ் மற்றும் எதிகாட் ஏர்வேஸ் இணைந்து ஸ்பான்சர் செய்ததால் இரண்டு நிறுவனத்தின் பெயரும் ஜெர்சியில் இடம்பெற்று இருந்தது.
இம்முறை எதிகாட் ஏர்வேஸ் மட்டும் முழு நேர ஸ்பான்ஸராக செயல்படுவதால் ஜெஸ்ஸியின் முன் பக்கத்திலும் பின்பக்கத்திலும் எதிகாட் ஏர்வேஸ் என்று மட்டும் போடப்பட்டுள்ளது.