தமிழகத்திற்கு மட்டுமின்றி கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறது. இதேபோன்று மற்றொரு பிரதான கட்சியான அதிமுகவும் ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டுகிறது. தமிழகத்தில் அடுத்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவரம் என்று கூறப்படுகிறது.

அதாவது தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். புதிய கட்சியாக இருந்தாலும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் கண்டிப்பாக அவர் திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமைவார் என்று கூறப்படுகிறது. விஜய், திமுக மற்றும் பாஜகவை மறைமுகமாக விமர்சிக்கும் நிலையில் அதிமுகவை இதுவரை விமர்சிக்கவில்லை. அதோடு கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக அறிவித்துள்ளார். விஜய் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் நிலையில் தற்போது திமுக தலைமை விஜயை விமர்சிக்க வேண்டாம் என்று உத்தரவு போட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் தேர்தல் வரும் என்பதால் கண்டிப்பாக பட்ஜெட்டில் அறிவிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அண்ணாமலை விமர்சனங்களுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து தான் தற்போது அவர் இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டார் என்பதால் விஜயை பற்றி விமர்சித்தும் அவரையும் உயர்த்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்படியே விஜயின் விமர்சனங்களுக்கு ஏதாவது பதில் கொடுக்க வேண்டிய சூழல் வந்தாலும் கட்சி தலைமை பதில் அளிக்கும் என்றும் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் அவரைப் பற்றி பேச வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.