
பிரபல நடிகரான நெப்போலியனின் மகன் தனுஷ். உடல்நலம் பாதிக்கப்பட்ட தனுஷ் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலையில் முன்னேற்றம் அடைந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை தனுஷ் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
சமீப காலமாக நெப்போலியன் மகன் மற்றும் மருமகள் குறித்து சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெப்போலியனின் சகோதரர் நெல்லை மாவட்ட காவல் துறையில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யூடியூப்பில் உள்ள வீடியோக்களை அகற்றும் பணியில் நெல்லை மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வீடியோ பதிவேற்றிய யூடியூப் பக்கத்தின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களையும் போலீசார் திரட்டி வருகின்றனர்.