
ராஜஸ்தானின் கைராலி மாவட்டம், வர்தமான் நகர் பகுதியில் உள்ள குருகிருபா நூலகத்தில் மே 16ஆம் தேதி நடந்த ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதல் சம்பவம், தற்போது மாநிலமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நூலகத்தில் அமைதியாக படித்து கொண்டிருந்த மாணவர் தருன் சர்மா மீது சச்சின் குஜார் என்ற இளைஞர் தலைமையிலான குழு காரணம் இல்லாமல் மோசமான முறையில் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம், நூலகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதலில் தருன் தீவிர காயமடைந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால், அரசு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தருனின் தந்தை ரவிகாந்த் சர்மா கூறுகையில், “என் மகன் தினமும் நூலகத்திற்கு சென்று படிப்பது வழக்கம், இந்த தாக்குதல் எதற்கும் காரணமின்றி நடந்தது” என்று கூறினார். இதையடுத்து நியூ மண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
FIR No 257/ 16-05-2025 हिंडोंन सिटी में दहशत, खुले आम लाइब्रेरी में घुस कर बच्चों पर जान लेवा हमला, बच्चों में दहशत
पुलिस अधीक्षक करौली ने शीघ्र गिरफ़्तार करने का आश्वासन दिया है@RajCMO @PoliceRajasthan pic.twitter.com/bF6mAKVIjP— सुनील उदेईया (@suniludaiya) May 17, 2025
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரஜேஷ் ஜ்யோதி உபாத்யாய், குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளார். அதேசமயம், நூலகம் நடத்தியவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வகையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மாணவர் தரப்பில் நீதிமன்றம் வழியே விரைவாக நீதியும் பாதுகாப்பும் கோரப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.