ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி, பில் சால்ட் களமிறங்கினார்கள், இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக  மும்பைக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. பெங்களூர் அணி ஐபிஎல் தொடரில் தன்னுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

முன்னதாக இந்த போட்டியில் தன்னுடைய இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். அப்போது படித்தார் மற்றும் கோலி களத்தில் இருந்தார்கள். அந்த ஓவரில் படித்தார் தடுத்து ஆடுவார். அப்போது அந்த பந்தை எடுத்து மறுமுனையில் இருந்து விராட் கோலி பக்கம் அடிக்க முயற்சிப்பார். ஆனால் சுதாரித்து கொண்ட விராட் கோலி கிரீஸ் உள்ளே சென்றுவிடுவார். இதனையடுத்து  சிரித்துக் கொண்டே வந்த பும்ராவிடம் விராட் கோலி என்னையே அவுட் செய்யப் பார்க்கிறாயா? என்பது போல சிரித்தபடி பேசிச் செல்வார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.