
கனடா நாட்டின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூட்டோ ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்த நிலையில் அதிகாரப்பூர்வமாக தற்போது ராஜினாமா செய்துள்ளார். அதாவது கடந்த ஜனவரி மாதமே அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமர் தேர்வு செய்யும் வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய பிரதமரை தேர்வு செய்ததால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதன்படி கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய பிரதமர் மார்க் கார்னியை இன்று ஜஸ்டின் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும் போது தன்னுடைய நாற்காலிகையும் தூக்கிக்கொண்டு சென்றார். அதாவது அவருடைய பதவிக்காலம் முடிவடையாததால் அதிருப்தி அடைந்த ஜஸ்டின் கோபத்தில் நாற்காலியை தூக்கி விட்டு சென்றார். போகும்போது நாக்கை வெளியே நீட்டி அப்படி ஒரு ரியாக்சன் கொடுத்தார். அது குறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் சொந்த கட்சியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.