இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில், ஒரு இளைஞர் தன் தலைமுடியை தானே வெட்டிக்கொள்கிறார். பொதுவாக முடிதிருத்தம் என்பது திறமையும், கடுமையான பயிற்சியும் தேவைப்படும் ஒரு கலை. அந்தக் கலைஞரை நாடாமல் ஒருவர் தானாகவே அழகாக முடி வெட்டிக்கொள்வது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தக் காணொளியில், “துனியா சே அலக் ஹை தில் கா லகானா” என்ற இந்தி பாடலை பின்னணியில் இசையாக்கிய அந்த இளைஞர், மிகத் திறமையாக தன் தலைமுடியை வெட்டுகிறார். அவரது கைப்பக்குவம், கவனம் மற்றும் தன்னம்பிக்கை மிகைப்படுத்தப்படாமல் இயல்பாகவே தெரிய வருகிறது. முடி வெட்டும் ஒவ்வொரு கட்டமும் சீராகவும் நேர்த்தியாகவும் காணப்படுவதால், இது  நன்கு திட்டமிடப்பட்ட செயல் என்பதை உணர்த்துகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Shyam Sen (@shyam.sen.714655)

 

இந்த வீடியோவை ‘@shyam.sen.714655’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ஆயிரக்கணக்கானோர் இது ஒரு சாதாரண செயல் அல்ல என்றும், ஒரு கலைஞன் மட்டுமே இப்படிச் செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். குறுகிய நேரத்தில் பெரும் பார்வைகளையும் லைக்குகளையும் பெற்று, இந்த வீடியோ உண்மையான திறமையை எடுத்துக்காட்டுவதாக மக்கள் பாராட்டுகின்றனர். தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பது இந்த வீடியோவின் முக்கியமான செய்தி.