உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் முஸ்கான் என்பவர் தன்னுடைய காதல் சாகலுடன் சேர்ந்து கணவர் சௌரப் ராஜ்புத்தை கொடூரமாக கொன்று உடம்பை 15 துண்டுகளாக வெட்டி உடம்பை நீல நீல டிரம்மில் வைத்து சிமெண்ட் போட்டு பூசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொடூர கொலை வழக்கில் முஷ்கான் மற்றும் சாகல் இருவரும் கைது செய்யப்பட்டு மீரட் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முஸ்கான் கர்ப்பமாக இருக்கிறார்.

இதேபோன்று தன்னுடைய கள்ளக்காதலன் அவ்னீஸ் உடன் சேர்ந்து சங்கீதா என்பவர் தன்னுடைய கணவனை கொலை செய்தார். அதாவது அவ்னிஷ் சங்கீதாவின் கணவனை தனியாக அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து பின்னர் இரும்பு கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு உடம்பை ஒரு பகுதியில் வீசிவிட்டனர். இந்த கொலை வழக்கில் சங்கீதா மற்றும் அவ்னீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முஸ்கான் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் சங்கீதாவும் கர்ப்பமாக இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரே சிறையில் இருப்பதால் நட்பு மலர்ந்துள்ளது. அதாவது இருவரும் தங்கள் கணவன்களை கொன்று கள்ளக்காதலனோடு வாழ வேண்டும் என்று நினைத்து அதற்காக திட்டம் தீட்டியவர்கள்.

தற்போது இருவருக்கும் கர்ப்பமாக இருப்பதால் சிறை வேலைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளுக்கு தந்தைகள் யார் என்பது சந்தேகமாக இருக்கிறது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கணவனை கொன்ற பிறகும் அவர்கள் கள்ளக்காதலனோடு சிறையில் இருந்தாலும் காதலை வளர்ப்பதோடு அவர்களின் குற்றத்தை உணராமல் இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது.