கேரள மாநிலத்தில் உள்ள முட்டம் பகுதியில் ஒரு தனியார் இன்ஜினியரிங் காலேஜ் உள்ளது. இந்த கல்லூரியில் ஆக்ஷா ரெஜி (22) என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதே கல்லூரியில் டோனன் ஹாஜி (22) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் நண்பர்கள். இவர்கள் இருவரும் சம்பவ நாளில் அந்த பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதனால் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி அவர்கள் அங்கு வந்து நீர்வீழ்ச்சி தடாகத்தில் இறங்கினர். பின்னர் இருவரின் சடலங்களையும் மீட்டனர். மேலும் இதை பார்த்து சக மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.