தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். அதாவது இந்தியா கூட்டணியில் திமுக கட்சி இருக்கும் நிலையில் பாஜக கட்சிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. குறிப்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தரவேண்டிய நிதியை சரியான முறையில் வருவதில்லை என்ற புகார்கள் எழுகிறது. பாஜக மற்றும் திமுக அரசியல் எதிரிகளாக இருக்கும் நிலையில் தற்போது பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினை இணைத்து ஒரு வீடியோவை எடிட் செய்து அதனை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

அதாவது நீயும் நானும் வேற இல்லடா ஒன்னு தான் என்கிற விஜய் பாடலை வைத்து இந்த வீடியோவை எடிட் செய்து விஜய் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் திமுகவை பாஜக விமர்சித்து வந்தாலும் சீமான் உள்ளிட்டோர் பாஜக மற்றும் திமுக மறைமுகமாக உறவில்  இருப்பதாக தான் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.