
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஏதாவது தலைப்பு கொண்டே விவாதிக்கப்படும் நிலையில் கோபிநாத் தொகுத்து வழங்கி வருவதால் தனி வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் கொரியன் கலாச்சாரத்தை கொண்டாடுபவர்கள் மற்றும் கொரியன் கலாச்சாரத்தை விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது.
அதாவது கொரியன் இளைஞர் பெண்களைப் போன்று மாற நினைக்கும் நபர்கள் செய்யும் காரியங்களையும், அதனை எதிர்ப்பவர்கள் கூறும் கருத்துக்களும் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் தமிழகத்தில் கரூரை சேர்ந்த பெண் ஒருவர் கொரியன் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த இளைஞர் நீயா நானா அரங்கில் வந்து கோபிநாத்திடம் பேசும் காட்சி பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.