
குஜராத்தின் நவ்சரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட போது ஏற்பட்ட திடீர் விபரீதம் அவரது உயிரை பறித்துள்ளது. செப்டம்பர் 23 அன்று ஹோட்டல் அறையில் நடந்த இந்த சம்பவத்தில், உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் காதலனும், அந்தப் பெண்ணும் திகைத்து, என்ன செய்வதென்ற குழப்பத்தில் பீதியடைந்தனர்.
பயத்தில் திகைத்த காதலன், உடனே மருத்துவ உதவியைத் தேடாமல் கூகுளில் அதற்கான தீர்வை தேடி உள்ளார். ஆனால் பெண்ணுக்கு ரத்த போக்கு அதிகமாகவே உடனடியாக நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு வரவழைத்தார். தனது நண்பனை அழைத்து, அவருடன் சேர்ந்து பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறப்பட்டதால், தாமதமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த நேரத்திற்குள் பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம், காதலனின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலிலேயே ஆம்புலன்ஸ் அழைக்காமல், இணையத்தில் தீர்வு தேடும் முயற்சியில் காதலன் நேரத்தை வீணாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த சோகமான சம்பவம், உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ உதவியைத் தேடுவது எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் பிறப்புறுப்பில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் தான் பெண் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது இவர்கள் சமீபத்தில் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக உறவில் இருந்திருக்கலாம். அதேபோன்று சம்பவ நாளில் உடலுறவில் இருந்தபோது பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து உடலுறவு வைத்துள்ளனர். அதே சமயத்தில் திடீரென பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகரித்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லாமல் 50 முதல் 60 நிமிடங்கள் வரை இணையதளத்தில் தீர்வை தேடியுள்ளார். மேலும் இதனால் தான் அந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாலிபரை தற்போது காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்