
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மாறநல்லூர் சீனி விளைப் பகுதி உள்ளது. இங்கு நித்தியானந்தன்-கீதா மணி தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு அமல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் ஊருக்கு பல வருடங்களுக்கு முன்பு வரை பேருந்து வசதி கிடையாது. அப்போது அமல் மாணவனாக இருந்த நிலையில் தன்னுடைய ஊருக்கு பேருந்து வசதி வேண்டும் என்று வலியுறுத்திய அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளார். ஆனால் அவருடைய கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் தொடர்ந்து அவர் மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து வந்தார். பின்னர் இறுதியாக அவர்கள் ஊருக்கு அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. இது அந்த ஊர் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவர்களும் மிகவும் பயனடைந்ததோடு அமலும் தன் கல்லூரிக்கு அந்த அரசு பேருந்தில் தினசரி சென்று வந்தார். அந்த பேருந்தில் அபிஜிதா என்பவர் பயணத்துள்ளார்.
இவரை முதல் முறையாக அமல் பார்த்த உடன் பிடித்து விட்டதால் இருவருக்குள்ளும் பேருந்தில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. பின்னர் அமலுக்கு வேலை கிடைத்த நிலையில் அவர் அதே பேருந்தில் தினசரி வேலைக்கு சென்று வந்த நிலையில் அபிஜிதா அதே பேருந்தில் சென்று வந்தார். இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் சம்மதம் தெரிவித்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்கு காரணமான அரசு பேருந்துக்கு சென்று அதில் பயணம் செய்ததோடு பேருந்தில் செல்பி எடுத்துக் கொண்டனர். அவர்கள் மணக்கோலத்தில் பேருந்தில் பயணம் செய்ததோடு செல்பி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தம்பதிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.