நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதிய பீகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்த மாணவர் அனுராக் என்பவர் அரசுத் துறையில் உதவிப் பொறியாளராக பணிபுரியும் தன்னுடைய உறவினர் மூலமாக நீட் தேர்வுத் தாள்களை முறைகேடாகப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

போலீசார்  அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கூறுகையில், மே 4-ம் தேதி இரவு, அமித் ஆனந்த், நிதிஷ் குமார் என்ற நபர்களிடம் என் மாமா அழைத்துச் சென்றார். அங்கே எனக்கு நீட் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் வழங்கப்பட்டது. அதை இரவோடு இரவாக படித்து மனப்பாடம் செய்தேன் என்று அனுராக் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.