
தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பாக இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துறைமுருகன் தொடங்கி வைத்த நிலையில் போராட்டத்தில் நீட் தேர்வால் பலியான அனிதாவின் சகோதரர் நீட் தேர்வுக்கு எதிராக பேசிய வீடியோவை பார்த்து மேடையில் அமர்ந்த உதயநிதி ஸ்டாலின் கண்கலகினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. முன்னதாக நீட் தேர்வால் உயிரிழந்த மாணவ மாணவிகளின் புகைப்படங்களுக்கு அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்திய நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கிய புகைப்படம் ஆகி வருகிறது.