நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவ மாணவிகள் கடுமையான சோதனைகளுக்கு பிறகு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்பாக ஒரு மாணவியின் டாப்ஸில் உள்ள பட்டனை கழட்ட சொன்ன விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதனை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் கூட ஈடுபட்டனர். அதன் பிறகு ஒரு மாணவி தேர்வு எழுத வந்தபோது மூக்குத்தி அணிந்திருந்ததால் அதனை கழட்டி விட்டு வருமாறு கூறினார். மற்றொரு பெண்ணின் தாலியை கழட்டி வைக்குமாறு கூறினார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஜவுளிக்கடைகளில் நீட் தேர்வுக்கு என பிரத்தியேக டாப்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

அதன்படி இது தொடர்பான ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகும் நிலையில் இது எந்த ஊரில் எந்த கடையில் எடுக்கப்பட்டது என்று சரிவர தெரியவில்லை. மேலும் அதில் நீட் தேர்வுக்கு டாப்ஸ் கிடைக்கும் என்று எழுதப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பரவலாக பரவி வருகிறது.