இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் 8வது நாளாக நீடிக்கிறது. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகருக்குச் செல்லவிருந்த விமான சேவையின் இடைநிறுத்தத்தை அக்டோபர் 18ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக அக்டோபர் 14 வரை சேவைகள் நிறுத்தப்பட்டன. தேவைகளுக்கு ஏற்ப இந்தியர்களை அழைத்து வருவதற்கு சிறப்பு விமானங்களை இயக்குவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.