அதிக அளவு சத்தத்தில் ஹெட்போன்ஸ் பயன்படுத்தும் போது நம்முடைய மூளை உற்சாகமடையும். ஹெட்போன்ஸ் மூலமாக பாடல் அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்தை கேட்டுக் கொண்டிருந்தால் அது நமக்கு மந்தமாக காது கேட்கும் தன்மையை அல்லது செவித்திறன் இழக்க கூடிய தன்மையை கூட உண்டாக்க கூடும்.

தொடர்ந்து பல மணி நேரம் இடையில் ஓய்வு இல்லாமல் ஹெட்போன்ஸ் உபயோகப்படுத்தினால் அது காது இரைச்சல் அதிகமாவதற்கு வழிவகுக்கும். ஹெட்போன் பயன்படுத்துவதால் பெருமூளையில் ரத்தக் கசிவு நிகழ்வாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காதில் இரைச்சல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஹெட்ஃபோன்ஸ் பக்கமே தலை வைத்து படுக்க வேண்டாம். இதனைத் தவிர்ப்பது முற்றிலும் நல்லது.