நாட்டின் 76 வது குடியரசு தின விழா நேற்று டெல்லியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றிய நிலையில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழா டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் (கடமைப்பாதை) நடைபெற்றது.

இந்த விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி துணை ஜனாதிபதியை வரவேற்க சென்றார். அப்போது கடமை பாதையில் குப்பை போன்ற பொருள் கிடந்தது. உடனடியாக அதனை குனிந்து பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து எடுத்து அகற்றினார். மேலும் அவ்வளவு பெரிய விழாவில் பிரதமர் மோடி யோசிக்காமல் குப்பையை அகற்றியது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.