
உகண்டாவில் ராணி எலிசபெத் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு காசி நங்கா நதி அமைந்துள்ளது. இந்த நதியில் முதலைகள் மற்றும் காண்டாமிருகங்கள் நிறைந்துள்ளது. இந்த ஆபத்து மிகுந்த நதியை 2 சிங்கங்கள் நீந்தி கடந்துள்ள சுவாரசிய சம்பவத்தை பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதாவது ஜேக்கப் என்ற சிங்கமும் அதன் சகோதரரான திபு சிங்கமும் 45 நிமிடங்களில் ஆற்றைக் கடந்துள்ளது. அதாவது இரு சிங்கங்களும் தங்களுடைய காதலியை பார்ப்பதற்காக ஆபத்தை தாண்டி சவால் மிகுந்த ஆற்றை கடந்து சென்றுள்ளது.
இதில் ஜேக்கபின் குடும்பத்தினை வேட்டைக்காரர்கள் கொன்றுவிட்ட நிலையில் இரும்பு பொறியில் சிக்கியதில் அது ஒரு காலையும் இழந்தது. இப்படிப்பட்ட சூழலில் கூட அது வெற்றிகரமாக ஆற்றை கடந்துள்ளது. முதல் முறையாக ஆபத்து நிறைந்த தண்ணீரில் சிங்கங்கள் காதலியை தேடி ஆற்றைக் கடந்தது இதுவே முதல்முறை என்று கூறுகிறார்கள். ஏனெனில் தண்ணீரில் இருக்கும் போது சிங்கங்களை விட முதலைகளுக்கு தான் பலம் அதிகம். மேலும் அந்த வனப்பகுதியில் பெண் சிங்கங்களை விட ஆண் சிங்கங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ஜேக்கப் மற்றும் திபு இருவரும் தங்கள் துணையை தேர்வு செய்வதில் தோல்வியடைந்து விட்டதால் இருவரும் வேறு பகுதிக்கு துணையை தேடி சென்றதாக கூறியுள்ளனர்.