
இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.
சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்தி விடுவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால்விடும் விதமாக பேசியது சர்ச்சையாக பேசப்பட்டது. அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுகிறோம் இந்தியாவிடம் “நாங்கள் தோல்வியடைந்தாலும் எங்களுக்கு கவலையே கிடையாது. இந்தியாவிடம் நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தாலும் எங்களுக்கு பரவாயில்லை. ஆனால் இந்நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபிக் இறுதிப் போட்டியில் நாங்கள் அவர்களை வீழ்த்துவோம் என்று வெளிப்படையாக சவால் விட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருடைய பேச்சுக்கு பதில் கொடுக்கும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். அதாவது இது சரியான வார்த்தை இல்லை. முதலில் நாம் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் நாம் விளையாடுவதில் கவலை இல்லை என்பது போல் கூறியிருந்தார் பென் டக்கெட். இது ஒரு வகையான தோரணை. என்னை பொருத்தவரை ஒரு அணியின் வீரர்கள் இப்படி நினைக்க கூடாது.
நாம் ஒரு நாட்டிற்காக விளையாடுகிறோம் என்று நினைத்து பெருமைப்பட வேண்டும். இந்திய ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்புகளை புரிந்து கொண்டு விளையாட வேண்டுமே தவிர அவர்களுக்கு சவால் விடும் விதமாக பேசுவது தவறு” என்று பேசி உள்ளார்