
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். விரைவான பயணம் மற்றும் கட்டணம் குறைவு என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் எதிர்பாராத விதமாக ரயிலை தவற விட்டால் அல்லது டிக்கெட்டை ரத்து செய்ய நேர்ந்தால் முழு பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு முதலில் ஐ ஆர் சி டி சி இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ஆன்லைனில் டிக்கெட் டெபாசிட் ரசித்தை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அவரவர் வங்கி கணக்குகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் திருப்பி வழங்கப்படும்.
அதுவே டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் பெற்று இருந்தால் அதனை ஆன்லைன் மூலமாக டிடிஆர் தாக்கல் செய்யப்பட்டால் அவரவர் வங்கி கணக்கில் அந்த டிக்கெட்டுக்கான பணம் நேரடியாக வழங்கப்படும். ஆனால் தட்கல் முறையில் பயனர் ஒருவர் டிக்கெட் பெற்று இருந்தால் அந்த டிக்கெட் ரத்து செய்யப்படும் பட்சத்தில் அதற்கான பணம் திரும்ப வழங்கப்படாது. தற்போது டிடிஆர் ஆன்லைன் மூலமாக எப்படி தாக்கல் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதற்கு முதலில் ஐ ஆர் சி டி சி யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று மெனு என்பதை கிளிக் செய்து சர்வீஸ் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன் பிறகு ஹிஸ்டரி ஆப்ஷனில் இருக்கும் transaction என்பதை கிளிக் செய்து இணையதளம் டிடிஆர்ஐ பதிவு செய்து கடவுச்சொல் சரி பார்க்க வேண்டும். அதன் பிறகு பயனர் டிடிஆர் தாக்கல் செய்துவிடும். மேலும் ரயில்வே நிர்வாகம் சில காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்து விட்டால் கேப்சாவுடன் பி என் ஆர் எண் மற்றும் ரயில் என்னை பதிவு செய்த பிறகு பயனருக்கு ஓடிபி வரும். அதனை பதிவு செய்த பின்னர் டிக்கெட்ரத்து என்பதை கிளிக் செய்தால் பி என் ஆர் மற்றும் பணத்தை திரும்ப வழங்குவதற்கான விவரங்கள் அனைத்தும் உங்களின் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும்.