
வெளிநாடுகளில் நாகரீக கலாச்சாரத்திற்கு ஏற்ப உங்களுக்கு வாடகைக்கு காதலி கிடைப்பார்கள். இதற்காக தனி கட்டணம் செலுத்த வேண்டும். ஜப்பான் நாட்டில் இது போன்ற கலாச்சாரம் உள்ளது. வாடகைக்கு கிடைக்கும் காதலியுடன் ஒன்றாக ஊர் சுற்றலாம், நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். ஆனால் இந்தியாவில் இது போன்ற விஷயங்கள் காணப்படுவது என்பது அரிது. இந்த நிலையில் instagramயில் இளம் பெண் ஒருவர் வீடியோவை பகிர்ந்துள்ளார். திவ்யா கிரி என்ற இளம் பெண் கண்ணாடியில் தெரிகிறார்.
அதன் மேல் பகுதியில் நீங்கள் சிங்கிளா? டேட்டிங் செல்ல விருப்பமா? என்னை டேட்டிங்கிற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்? என பதிவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் காபியுடன் டேட்டிங் செல்ல 1500, இரவு விருந்து மற்றும் படம் பார்க்க 2000 ரூபாய், கைகோர்த்தபடி பைக் டேட்டிங் செல்ல 4000 ரூபாய், டேட்டிங் விவரங்களை பொதுவெளியில் பதிவிட 6 ஆயிரம் ரூபாய், வார விடுமுறையில் இரண்டு நாட்கள் வெளியில் செல்ல 10 ஆயிரம் ரூபாய் என ஒவ்வொரு வகையான விஷயத்துக்கும் ரேட் விவரங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க