
பிரபல நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. வருகிற நவம்பர் 18-ஆம் தேதி திருமண வீடியோ ரிலீசாகும் என்ன நெட்பிளிக்ஸ் அறிவித்தது. டிரெயிலர் வீடியோவில் பயன்படுத்தப்பட்ட மூன்று வினாடி பாடலுக்காக 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷ் பற்றி பேசி நயன்தாரா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நயன்தாரா கூறியதாவது, திரு தனுஷ் பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த திறந்த கடிதத்தை எழுதுகிறேன். திரு கஸ்தூரிராஜாவின் ஆதரவில் உங்கள் அண்ணன் திரு.கே செல்வராகவனின் இயக்கத்துடன் முன்னணி நடிகராக உயர்ந்த நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த பின்னணியும் இல்லாமல் சவாலான சினிமா உலகில் போராடி நேர்மையான உழைப்பின் மூலம் இன்று நான் பெற்ற இடத்தை அடைந்தேன். என் பயணத்தைப் புரிந்து என்னை பெருமையாக பார்க்கும் ரசிகர்களும் திரை துறையினரும் நன்றாக அறிந்துள்ளனர்.