இந்தியாவில் அரசு சலுகைகளை பெறுவது என அனைத்திற்கும் கேஒய்சி செயல்முறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் KYC நடைமுறையை வைத்து இந்தியாவில் தற்போது பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறையின் மூலம் தனிநபரின் வங்கி கணக்கு மற்றும் ரகசிய விவரங்கள் அனைத்தும் பெறப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது.

எனவே கேஒய்சி செயல்முறையை நீங்கள் முடிக்க விரும்பினால் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் நேரடியாக அணுகி அதன் மூலம் KYC சரி பார்ப்பை முடிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது கேஒய்சி செயல்முறை மூலம் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் எந்த தகவல்களையும் நம்பி லிங்குகள் மூலமாக கேஒய்சி செயல்முறையை தொடர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.