
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இப்படி அரசின் அனைத்து திட்டங்களையும், பலன்களையும் விவசாயிகள் பெறுவதற்கு ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு முக்கியமான ஒரு அடையாள அட்டை ஆகும்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் மார்ச் 31ஆம் தேதிக்குள் கலந்து கொண்டு தங்களுக்கான அடையாள எண்ணை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். எனவே விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றுக் கொள்ளலாம்.