
நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து புரட்சித்தமிழர் கட்சி தொடங்கி கொடி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ராஜன், சீமான் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில்,
சீமான் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் கூட்டணி பேச நேரடியாக வர மாட்டிக்கிறாங்க.
நீங்க கூட்டத்தை கூட்டுங்க எதிர்ப்பது போல் எதிர்க்கிறோம் என்று பாவனைதான் செய்கிறாரே தவிர அது உண்மை அல்ல. கடைசி 16 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி வளர்ந்ததை விட சீமான் வளர்ந்தது தான் அதிகம். அவருக்கு யாரெல்லாம் ஆதரவளிக்கிறார்களோ , யாரெல்லாம் அவர் பின்னால் நடக்கிறார்களோ யாரெல்லாம் அவர் சொல்வதை கேட்டு வருகிறார்களோ அவர்களை தவிர வேறு யாரையும் நாம் தமிழர் கட்சியிலிருந்து யாருக்கும் தெரியாது. பத்திரிக்கை நண்பர்கள் உங்களுக்கு கூட தெரியாது என்று தெரிவித்துள்ளார்.