தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறையின் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கரில் மாபெரும் வனம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி 132 ஏக்கர் உயிர் நிலங்கள் மீட்கப்பட்டு 45 கோடி ரூபாய் செலவில் 51 ஆயிரத்து 600 மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் 25 இடங்களில் காற்று தர கண்காணிப்பு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.