
சென்னை மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் பாடசாலை தெருவில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவரை பிரிந்து மகள்களான ஸ்வேதா(28), நிவேதா(24) மகன் பரத்(26) ஆகியோருடன் வசித்து வந்தார். இதில் நிவேதாவை சேனிஷ்குமார் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நிவேதா ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார். குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்ததால் கடந்த மாதம் 28-ஆம் தேதி நிவேதா அம்மா வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குமார் நிவேதாவை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்து வர மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது நிவேதா குமாருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் குமார் தனது மனைவியின் வயிற்றில் ஓங்கி மிதித்துள்ளார். மேலும் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியின் கைப்பிடியை வைத்து ஸ்வேதாவின் தலையில் ஓங்கி அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயம் அடைந்த ஸ்வேதாவும், நிவேதாவும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.