ரஷ்ய நாட்டில் உள்ள மாஸ்கோவில் ஒருவர் பறவைகளை சுடும் துப்பாக்கியால் மரத்தில் சுட்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக மரத்தில் பட்ட குண்டு எதிர்பாராத விதமாக அவருடைய நிறைமாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் பட்டது. இதனால் அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது துப்பாக்கி குண்டு வயிற்றின் மேற்பரப்பில் இருப்பது தெரிய வந்தது. அதாவது குழந்தையின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்துள்ளது.

இதனால் தாய்க்கும் சேய்க்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறினார். அதாவது குண்டு குழந்தையின் வயிற்றின் ,மேற்பரப்பில் தங்கி விட்டதால் உள்ளுறுப்புகளில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறினார். அதோடு குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை மூலம் குண்டையும் அகற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். மேலும் அதன்படி அந்த பெண்ணுக்கு சிசேரியன் நடைபெற்ற போது குழந்தையின் வயிற்றில் இருந்த குண்டையும் அகற்றினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.