
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 13ஆம் தேதி இன்று நடைபெற உள்ள நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகின்றது.
இந்த போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ரசிகர்கள் போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் போது போட்டியை பார்த்து டிக்கெட்டை காண்பித்து எந்தவித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் எனவும் போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது இந்த சலுகை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.