கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர். உ தொடர்ந்து, கோழிக்கோடு மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ள 7 கிராமங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளிகள், கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. இரு தினங்களுக்கு முன் அங்கு நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு நோய்த் தடுப்பு பணிகளை அம்மாநில சுகாதாரத் துறையினர் முடக்கி விட்டுள்ளனர். இதுவரை 94 பேரிடம் உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.