
தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான தடை ஜூன் 14 நாளை முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இதற்காக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு சுமார் 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் வெளிமாநில பதிவெண்ணாக தமிழக எண்ணாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் கால அவகாசம் கேட்டு போக்குவரத்து துறை ஆணையருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என தெரிகிறது.