திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் அக்டோபர் 23ஆம் தேதி நாளை நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அக்டோபர் 23ஆம் தேதி திமுக அனைத்து அணி செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி காட்சி மூலமாக திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.