
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் மண்டலம் திர்சுமரு கிராமத்தில் நான்கு கால்களைக் கொண்ட நாரை பறவை ஒன்று காணப்பட்டது. பலத்த காற்று வீசியதால் இப்பறவையால் பறக்க முடியாமல் போயிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாரை மீட்கப்பட்டு, மண்டல கால்நடை அலுவலர் புண்டரி பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு முட்டையில் இரண்டு கரு இருக்கும் போது, ஒன்று முழுமையாக உருவாகும் போது, இதே போன்ற வளர்ச்சிகள் ஏற்படும் என்றும் அவர் கூறினார். இந்த பறவையை அப்பகுதியினர் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.