மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த விலங்கு ஆர்வலரான விஜய் ரங்காரே தனது instagram பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் நாய்களை கவனித்துக் கொள்ளும் ஒரு நபர் பெல்டால் நாய்களை அடிக்கிறார் இதனை அங்கிருந்து மற்றொரு ஊழியர் காணொளியாக பதிவு செய்த நிலையில் இது விலங்கு ஆர்வலரின் பார்வைக்கு வந்துள்ளது.

இதை அடுத்து விஜய் ரங்காரே அந்த நாய்கள் விடுதிக்கு சென்று அங்கிருந்த அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். இந்த காணொளியும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. விஜய் ரங்காரே காணொளியுடன் காவல் நிலையத்தில் தான் புகார் அளித்திருப்பதாகவும் அந்த கொடூரமான நாய்கள் விடுதியை மூடச் செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/reel/DEF8LMsTiWx