
நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விலகி வருகிறார்கள். அந்த வகையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட x பதிவில் நான் இதுவரை நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக இருந்த நிலையில் தற்போது அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவது கடினமான முடிவாக இருந்தாலும் சமீபகாலமாக கட்சியின் உள்கட்டமைப்பு செயல்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது வருத்தம் அளிப்பதால் கனத்த இதயத்தோடு விலகிக் கொள்கிறேன். மேலும் கொள்கை கோட்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை என்ற நிலைப்பாட்டோடு கட்சியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.