தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாரதிராஜா. இவை இயக்கத்தில் வெளியான மண்வாசனை கலந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் 90களில் மிகச் சிறந்த நாயகிகளாக இருந்த பெரும்பாலானோர் பாரதிராஜாவின் மூலம்தான் அறிமுகமானவர்கள். பல முன்னணி இயக்குனர்களும் இவரிடம் தான் பாடம் கற்றுக் கொண்டனர். தற்போது பாரதிராஜா குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆரவாரமில்லாமல் அழகான ஒரு காதல் கதையை எப்படி சொல்ல வேண்டுமென தியாகராஜன் குமாரராஜாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அமேசான் OTTயில் வெளியாகவுள்ள ‘மாடர்ன் லவ் – சென்னை’ தொடரின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், ‘காதல் இல்லாமல் கலைஞன் உருவாக முடியாது. நான் என் வாழ்க்கையில் 4 காதலை பார்த்திருக்கிறேன். நான் TKவின் ரசிகன் தான்’ என்றார்.