கர்நாடகா பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பணமோசடி செய்து உள்ளார். தொழில் அதிபர் ஒருவரை மிரட்டி ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் சென்ற 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ். மேலும் இவருடன்  ஜாக்குலின் பெர்னான்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி உட்பட பல நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகி அவர்களும் விசாரணை வளையத்தில் சிக்கினர். இந்த வழக்கில் நடிகை சாகத் கன்னாவும் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை சாகத் கன்னா சமீபத்தில் பேட்டி அளித்தபோது, சுகேஷின் ஜெயில் அறையில் லேப்டாப், வாட்ச் உட்பட பல ஆடம்பரப் பொருட்கள் இருந்தது. இதற்கிடையில் சுகேஷ் தன்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். அதாவது, “நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன். மேலும் தென்னிந்தியாவின் பெரிய tv சேனலினுடைய உரிமையாளர். தற்போது முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கிறேன். பெரியபுள்ளி என்பதால் சிறைச்சாலையில் இத்தனை வசதிகள் எனக்கு செய்து தரப்பட்டுள்ளது. எனக்கு உன்னை மிகவும் பிடித்துவிட்டது. நான் உன்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என சுகேஷ் மண்டியிட்டு என்னிடம் ப்ரோபோஸ் செய்தார் என சாகத் கன்னா கூறினார்.