பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சஜித் கான். இவர் தற்போது தான் மற்றும் ஒரு கிரிக்கெட் வீரராகவில்லை என்றால் ரௌடியாக மாறி இருப்பேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பாகிஸ்தான் நியூஸ் சேனலுக்கு அவர் பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம் நீங்கள் கிரிக்கெட் வீரராக வில்லை என்றால் என்ன ஆகியிருப்பீர்கள் என்று கேட்டனர்.

இதற்கு அவர் நான் ஒரு கேங்ஸ்டர் ஆக மாறி இருப்பேன் என்றார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌. மேலும் இவர் பாகிஸ்தான் அணிக்காக மொத்தம் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் மொத்தம் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.