
சமூக ஊடகங்களில் தற்போது பெரும் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு அதிர்ச்சியையும், நகைச்சுவையையும் ஒரே நேரத்தில் அளிக்கிறது. ஒரு ஸ்கூட்டர் ஓட்டுநர் சாலையில் வேகமாக செல்லும்போது, எதிர்பாராதவிதமாக ஒரு கருப்பு பூனை சாலையைக் கடக்கிறது.
இதனை பார்த்த நபர் தயங்கி சில நொடிகள் நின்று பின்னர் பயணத்தைத் தொடருகிறான். ஆனால், அதற்குள் பின்னால் வந்த மற்ற மூன்று ஸ்கூட்டிகள் வரிசையாக மோதி , நான்கு பேர் கீழே விழுந்தனர்.
बिल्ली के रास्ता काटने से हमेशा एक्सीडेंट होते हैं..
ये देख लो सबूत.. अब तो तुम्हें भी मानना पड़ेगा..!🤣🤣 pic.twitter.com/MLLsUxgwEP— ममता राजगढ़ (@rajgarh_mamta1) July 9, 2025
இந்த வீடியோவில் யாருக்கும் பெரும் காயங்கள் ஏற்படவில்லை. சாலையில் சிக்கலான போக்குவரத்து, கவனக்குறைவு மற்றும் வீண் மூடநம்பிக்கைகளால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருபுறம் விபத்து, மறுபுறம் மூடநம்பிக்கையை உறுதி செய்தது போன்ற பார்வையிலேயே இந்த வீடியோ அதிக கவனத்தை பெற்றுள்ளது.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனங்களும் நகைச்சுவையுடனான கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். “ஒரு பூனை சாலையைக் கடக்கிறதைக் கண்டதும் நின்றது தான் தவறு… ஆனால் பிரேக் போட்டது நால்வரையும் தரையில் விழ வைத்தது” என ஒருவர் பதிவு செய்துள்ளார்.
மேலும், “பூனைதான் கடந்தது… ஆனால் சுழன்றது நம்ம வாழ்க்கைதான்!” என மற்றொரு நபர் கமெண்ட் செய்துள்ளார். வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகள் பெற்று, வைரலாகி வருகிறது.