
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 300 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்து நிலையில் தற்போது இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் போன்றவைகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த மாதம் 5-ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று சென்னையில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் நடனமாடிய கிஸிக் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தெலுங்கு ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அல்லு அர்ஜுனிடம் ரசிகர்கள் தெலுங்கில் பேசுமாறு கூறினர்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜுன் நாம் எந்த மண்ணில் இருக்கிறோமோ, அந்த மண்ணின் மொழியில் பேசுவது தான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என்று கூறினார். அதோடு நான் சென்னை பையன் என்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னைக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டுக்கு வந்தால் நாம் தமிழில் தான் பேச வேண்டும். அதுதான் நாம் தமிழ் மண்ணுக்கு கொடுக்கும் மரியாதை என்று அல்லு அர்ஜுன் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நான் நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் வரை சென்றாலும் நான் சென்னை பையன் தான் என் நண்பர்களுடன் சேர்ந்து சென்னை லோக்கல் தமிழில் பேசுவேன் என்றார். மேலும் நடிகர் அல்லு அர்ஜுன் சென்னையில் தான் பள்ளி படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.