
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எப்போதோ மேடையில் பேசிய வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் கலாய்த்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, என்னை கராத்தே போட்டிக்கு அனுப்பி வச்சாங்க. அப்போ நான் ரொம்ப ஒல்லியா சின்ன பையனா இருந்தேன். நான் கிரீன் பெல்ட் தான் வாங்கி இருந்தேன்.ஆனால் ரெட் மற்றும் பிளாக் பெல்ட் வாங்கிய முரட்டு ஆட்களை என்னுடன் சண்டை போட இறக்கி விட்டாங்க.
அவங்க என்ன அடிச்சாங்க. நான் நழுவி நழுவி ஓடினேன். கடைசில அவன் சோர்வடைந்தான். அப்புறம் ஒரே குத்து. அவனை மடக்கி சுருட்டி நான் ஜெயிச்சுட்டேன். அந்தக் கப்போடு எங்க வீட்டுக்கு போனேன். நான் ஜெயித்தேன் என்று சொன்னத எங்க அப்பா கூட நம்பல என்று கூறினார். மேலும் நடிகர் சீமான் சொன்ன ஒரு கராத்தே கதை சினிமாவில் வரும் சீன் என்று கூறி அந்த சீனையும் அவர் பேசிய வீடியோவையும் இணைத்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/DCE0rxLyf3M/?utm_source=ig_web_copy_link