
தமிழ் சினிமாவில் திறமை இருந்தும் சாதிக்க முடியாமல் வாய்ப்புக்காக போராடுபவர் தான் நடிகை சாந்தினி. பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த இவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய இவர் நடன இயக்குனர் நந்தாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது சாந்தினி ஃபயர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்த ஒரு பேட்டியில் நடிகை சாந்தினி பேசியபோது, “எங்களுக்கு 2018 வருடம் திருமணம் ஆனது. அந்த நேரத்தில் நான் நடித்த படங்கள் வெளியானது.
திருமணத்திற்கு முன்பு நான் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தால் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு போவது குறித்து யோசித்து இருப்பேன். ஆனால் திருமணம் செய்து சந்தோஷமாக உள்ளேன். எனக்கு நந்தா கிடைத்தது வரம். அவர் என்னுடைய கேரியருக்கு ரொம்பவே சப்போர்ட் பண்ணினார். இன்ஸ்டாவில் நிறைய கிளாமர் போட்டோஷூட் நடத்துகிறேன் என்று கமெண்ட் வரும். ஆனால் அதற்கெல்லாம் என் கணவர் கோபப்பட்டதே கிடையாது. நான் நடிச்ச படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அதுதான் என்னுடைய வருத்தம்” என்று கூறியுள்ளார்.